மத்திய ஆபிரிக்கக் குடியரசு- Central African republic - மத்திய aஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே சாட், கிழக்கே சூடான், தெற்கே கொங்கோ குடியரசு மற்றும் கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மேற்கே கமரூன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இந்நாட்டின் பெரும்பகுதி சூடான்-குயினியன் புல்புதற்காடுகளால் ஆனது. ஆனால் வடக்கே சஹெலோ-சுடான் நிலமும் தெற்கே நடுவரைக் கோட்டு காடுகளும் உள்ளன. கொங்கோ ஆற்றில் பாயும் உபாங்கி ஆற்றின் கரைகளில் இந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு அமைந்துள்ளது. மீதி ஒரு பங்கு சாரி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டை ஆண்ட பிரெஞ்சுக்காரர் இதனை உபாங்கி-சாரி என அழைத்தனர். சாரி ஆறு வடக்கே பாய்ந்து சாட் ஏரியுள் கலக்கின்றது.
மத்திய ஆபிரிக்கக் குடியரசும் அதன் எல்லை நாடுகளும் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகவிருந்த இந்நாடு ஆகஸ்ட் 13, 1960 இல் விடுதலை பெற்றது. விடுதலை அடைந்த நாளிலிருந்து மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை மக்களால் சனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படாத அதிபர்களே ஆட்சி நடத்தினர். 1993 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் Ange-Félix Patassé என்பவர் அதிபரானார். 2003 இல் பிரெஞ்சு ஆதரவு பெற்ற புரட்சி மூலம் இராணுவ ஜெனரல் பிரான்சுவா பொசிசே ஆட்சியைக் கைப்பற்றினார். பின்னர் மே 2005 இல் நிகழ்ந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்று இன்று வரை அதிபராயுள்ளார்.
மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் வறிய நாடுகளில் ஒன்றாகவும், ஆபிரிக்காவின் 10 வறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
மத்திய ஆபிரிக்கக் குடியரசு உலகின் 43வது பெரிய நாடாகும். இதன் மக்கள் தொகை 4,303,356 ஆகும். இவர்களில் 11 விழுக்காடு எயிட்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்
80 இனக் குழுக்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். அனைத்து இனக்குழுக்களும் தமது மொழியைக் கொண்டுள்ளன.

No comments:
Post a Comment