Friday, July 31, 2009

ஐக்கிய நாடுகள் பொது சபையில் நோம் சாம்ஸ்கி புத்தகத்தை பரிந்துரைத்த ஹ்யுகோ சாவேஸ்

வன்னி அகதிகள் குறித்து ஐ.நா. செயலர் சர்வதேசத் தலைவர்களுடன் ஆலோசனை

....................................
Pictureலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிலை குறித்து சர்வதேசத் தலைவர்கள் சிலருடன் தாம் ஆலோசனை நடத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். தாம் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா. செயலாளர் மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.

இது தொடர்பாக ஐ.நா. செயலர் வாஷிங்க்டனில் செய்தியாளரிடம் தெரிவித்தவை வருமாறு:

சமீபத்தில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் போது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டேன்.

இதன்போது இலங்கைக்கான எனது விஜயத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்பது குறித்து ஆராய்ந்தேன்.

நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அழுத்தமாக வலியுறுத்தினேன்.

முதலில் முகாமில் உள்ள மக்களின் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அவர்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும். மனிதாபிமானப் பணியாளர்களின் நடமாட்ட சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்.

முகாமில் உள்ள மக்களுக்கு மேலும் சுதந்திரம் அவசியம். அவர்களுடைய வாழ் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

தமிழர்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்களை நோக்கி நேசக்கரங்களை நீட்டுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.

சீனாவிற்கான விஜயத்தின் போதும் ஜி 8 உச்சி மாநாட்டின் போதும் இந்திய,சீனா தலைவர்கள் உட்பட முக்கியமான சர்வதேசத் தலைவர்களுடன் இந்த விஷயங்கள் குறித்து ஆராய்ந்தேன். தொடர்ந்தும் இது குறித்து ஆராய்வேன். என்றார்.

பலுச்சிஸ்தானில் இந்தியா தலையிட்டதற்கான ஆதாரம் எங்கே? அமெரிக்கா கேட்கிறது

லுச்சிஸ்தான் பிரச்சினையில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தான் தலைவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் அதற்கான ஆதாரங்களை அந்த தலைவர்கள் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தானுக்கான அமெரிக்க தனித்தூதர் ஹால்புரூக் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இயற்கை வளம் கொழிக்கும் பகுதி பலுச்சிஸ்தான் ஆகும். பாகிஸ்தானின் பெட்ரோல் தேவை அந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கும் பெட்ரோல் மூலம் தான் நிறைவு பெறுகிறது. ஆனால் அந்த மாநிலத்தில் போதுமான அளவு முன்னேற்ற திட்டங்களை பாகிஸ்தான் அரசு செயல்படுத்தவில்லை. பஞ்சாப், சிந்து மாநிலங்கள் வளர்ச்சி பெற்ற அளவுக்கு பலுச்சிஸதான் வளரவில்லை. அந்த மாநில மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இதனால் அந்த மாநில மக்கள் தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தை ஒடுக்கமுடியாத பாகிஸ்தான், இந்தியா மீது அபாண்டமாக பழி போட்டு உள்ளது. இந்தியா தான் தனி நாடுகோரும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு தருவதாக பாகிஸ்தான் கூறி வருகிறது. இந்த குற்றச்சாட்டை சமீபத்தில் எகிப்து நாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த அந்த நாட்டு பிரதமர் கிலானி அவர் முன் வைத்தார். அதோடு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை மந்திரி ரெகிமானும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டு பற்றி அமெரிக்கா கூறுகையில், `இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் தரவில்லை' என்று கூறிஉள்ளது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தனித்தூதர் ஹால்புரூக் நிருபர்களிடம் கூறுகையில், `பலுச்சிஸ்தான் பிரச்சினையில் பிரிவினைவாதிகளுக்கு இந்தியா ஆதரவு தருவதாக பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்களை அந்த நாட்டு அரசு கொடுக்கவில்லை' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அது ஆதாரமே தரவில்லை என்று கூறினால் அது தவறானதாகி விடும் என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு கருத்துவேறுபாடு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

Thursday, July 30, 2009

சுஃபி இசை ஒரு அறிமுகம்


சுஃபி - பொதுவாக இது முஸ்லிம்களின் இசை. இன்றைக்கும் மசூதிகளில் திரு குரானை ஓதும் முறைகூட ஒருவகையில் சுஃபி இசையின் ஒரு வடிவம்தான் என்று பட்டிருக்கிறேன். சுபி இசை பெரும்பாலும் கவாலி (Qawwali) இசை என்றே அதிகம் அறியப்படுகிறது. சுபியின் மற்றுமொரு வடிவம்தான் கவாலி இசை.முதலில் மெல்லிய ஹார்மோனியமும் அதனை தொடர்ந்து மிருதுவான தபேலா அல்லது டோலக், பிறகு உச்சஸ்தாயில் ஆலாப், அதன்பின் தேவைப்பட்டால் கவிதை அல்லது பாடல். இதுதான் சுஃபி இசையின் வடிவம். பெரும்பாலும் ஹார்மோனியமும் தபேலாவுமே இதன் இசைக்கருவிகளாக செயல்படுகிறது.



இந்தியாவில் மொகலாயர்களின் வருகைக்கு பின்னர் இந்திய பாரம்பரிய இசையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்ப்பட்டு இன்றைக்கு இந்தியாவின் தொன்மையான இசையாக அறியப்பட்டு வரும் "ஹிந்துஸ்தானி" இசை கிடைத்தது. அனேகமாக, அது வரையில் இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த மெலடி என்று அறியப்படுகிற தனியிசை மருகி ஹார்மோனி அல்லது ஆர்கெஸ்ட்ரா என்று அறியப்படுகிற கூட்டிசையோடு இணைந்து "ஹிந்துஸ்தானி இசை"யாக உருமாறியது. இந்த "ஹிந்துஸ்தானி" இசையை பாடும் ஹிந்துக்கள் "பண்டிட்"என்றும் முஸ்லிம்கள் "உஸ்தாத்" என்றும் அழைக்கபடுவதாய் படித்திருக்கிறேன். இந்த கலவைக்கு முந்திய் இசைவடிவம்தான் சுஃபி.



முன்பெப்போதும் இல்லாத அளவில் தற்பொழுது, இந்தியாவில் பாகிஸ்தானி முஸ்லீம் இசைக்கலைஞர்களின் இசை பெரிதும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதற்க்கு "நுஸ்ரத் பதே அலி கான்", உஸ்தாத் சுல்தான் கான்" மற்றும் இளைய தலைமுறை இசைகலைஞரான "அதிப் அஸ்லாம்" என நிறைய உதாரணம் சொல்ல முடியும். இவர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒரு ஒற்றுமை, சுஃபி இசை. மற்றும் எந்த கலப்படமும் இல்லாமல், நல்ல இசையை கொடுத்ததால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருக்கிறது.ஆனால் சுஃபி, கசல், க்கவ்வாளி என பல இசை வடிவங்கள் துருக்கி மற்றும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதியானவையே. அதலால் இந்தியாவில் கிடைக்கும் இந்த இசைவடிவங்கள் சிற்ச்சில கலப்புக்களை கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. இசைக்கு இன, மொழி, மத வேறுபாடுகள் கிடையாது.


ஆகவே சுஃபி இசை, இசையை விரும்பும் நம் எல்லோருக்கும் பொதுவானது.பொதுவாக மனிதனுக்கு இசையின் தேவை அவனது தனிமையை அகற்றுவதற்காக தேவைப்படலாம், மென்சோகத்தை வெளிப்படுத்த தேவைப்படலாம், அதீத பகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது இறைவனை அடைவதை இருக்கலாம். ஆக இசை, மனிதனுக்கு இந்த மூன்றையும் கொடுப்பதியிருக்க வேண்டியது அவசியம். சுஃபி இசையை பொறுத்தமட்டிலும், அதன் சிறப்பு என்னவென்றால் அது தனக்குள்ளேயே ஒரு தனிமையை கொண்டிருக்கும், மெல்லிய சோகம் ஒளிந்திருக்கும், ஒரு சாதுவின் மகிழ்ச்சியை பெற்றிருக்கும் இந்த மூன்றுமே சரிவர இணையபெற்றதுதான் சுஃபி இசை.



முரளிகுமார் பத்மநாபன்

eniyoruvithiseivom.blogspot.com

குற்றவாளிகளை ஒப்படைக்க பாக். மறுத்து விட்டது: இந்தியா

ந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு, தப்பியோடிய தாவூத் இப்ராகிம் உட்பட 42 குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
தப்பியோடிய குற்றவாளிகள் குறித்த விஷயத்தில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு தர மறுப்பதாக மாநிலங்களவையில் பேசுகையில் கிருஷ்ணா கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 42 குற்றவாளிகள் பட்டியலை இந்தியா, பாகிஸ்தானிடம் அளித்துள்ளதாகவும், இவர்களில் கடந்த 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் மற்றும் கடந்த நவம்பரில் நடைபெற்ற மும்பை தாக்குதல் குற்றவாளிகளும் அடங்குவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கான ஆதாரங்களும், ஆவணங்களும் அளிக்கப்பட்டு விட்ட நிலையில், பாகிஸ்தான் அவை போதுமானதாக இல்லை என்றும், அவர்களுக்கு எதிரான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வருவதாகவும் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டா ஷகில், லக்பீர் சிங் போன்ற முக்கியக் குற்றவாளிகள் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த குற்றவாளிகளைப் பொருத்தவரை, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றவாளிகளை ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை காரணம் காட்டியும் அவர்களை ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மகிழ்ச்சியான நாடு இந்தியா!

வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் அமெரிக்கா, இங்கிலாந்தைக் காட்டிலும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது இந்தியா.
இங்கிலாந்தைச் சேர்ந்த 'நியூ எகனாமிக்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளை தரவரிசைப் படுத்தி, 'ஹேப்பி பிளானட் இன்டெஸ்' பட்டியலிட்டுள்ளது.
மொத்தம் 143 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியா 35வது இடத்தைப் பெற்றுள்ளது.
பொருளாதாரத்தில் நட்புணர்வுடனும், மக்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டே இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாழ்க்கைத் தரம், வாழ்க்கையில் பொருளாதாரம் உள்ளிட்ட எதிர்பார்ப்புகள் மற்றும் வாழ்க்கையில் திருப்தி போன்றவற்றையும் கொண்டு தரப் பட்டியல் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கோஸ்டா ரிகா முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தியா 35-வது இடத்தைப் பிடிக்க, அமெரிக்கா 114-வது இடத்திலும், இங்கிலாந்து 74வது இடத்திலும் உள்ளது. பிரேசில், சீனா முறையே 9 மற்றும் 20வது இடத்தை வகிக்கின்றன. ரஷ்யா இருப்பதோ 108-வது இடத்தில்.
பொருளாதாரத்தில் பின்னடைவில் உள்ள நாடுகளில் கூட மக்கள் வாழ்க்கையில் அதிக எதிர்பார்ப்பும், அதில் முழு மன நிறைவும் பெறுகின்றனர் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.
இதன் மூலம், பணம் இல்லாமலே நல்ல நிறைவான வாழ்க்கையை வாழ முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும், மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த ஆரோக்கியமானவர்களாகவும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.


நிகழ்வுகள்.com

லத்தீன் அமெரிக்க நாடுகளின் மீதான சுரண்டல் குறித்த புத்தகத்தை ஒபாமாவிடம் வழங்கிய சாவேஸ்

செம்மலர் இரா சிந்தன் கவிதை

காலத்தில் பொழியாத மழை பற்றி
கவலை இல்லை எமக்கு
நாங்கள் நகரத்து வாசிகள் ..

நாட்கள் விடியும் ..
வானத்தின் வண்ணங்கள்
பலப்பலவாய் மாறும் ..
பின் இருளும் ...
இயந்திர சுழற்சியே இன்பம் !
மழையெனில்
எமக்கு துக்கம் !

கருப்புக் கொடி பிடிப்போம் !
பிளாஸ்டிக் காகித்தின் கீழ்
மறைவோம்
மூடிய முக்காட்டுக்குள்
ஒளிந்துகொள்வோம் !

ஓட்டை ஓடுகள் வழி
வீட்டுக்குள் நீர் புகுந்து
வேலை கொடுப்பதால்
எம் வீட்டுப் பெண்களுக்
மழையை பிடிக்காது


மாநகரக் குப்பையின்
அழுகிய நாற்றத்தை
காலடியில் சேர்ப்பதால்
பாதசாரிகள்
அதை விரும்புவதில்லை ..


வியாதிகள் கொண்டுவரும் ...
நோய் தீர்க்கக் கேட்டு
மருத்துவரை நாடினால்
நீண்ட நாள் சேமிப்புகள்
கட்டணமாய்க் கரையும் ...


ஹ்ம்ம்ம் ..
வேண்டாத விருந்தாளியை
யார்தான் அழைப்பார்?


பருகவேண்டும் ..
நனைய வேண்டும் ..
விடுமுறை தரவேண்டும்
ஒருநாளேனும்
அந்த அவசரக் குளியலுக்கு ..

ஆசைதான் .. ஆயினும்
பொருளுக்காய் அலைகின்ற
எம் நகரத்து அவசரத்தில்
பொழிகின்றதுளிபற்றி
யாருக்குத்தான் கவலை?!!

Wednesday, July 29, 2009

அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு சிக்கல்?

அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் (Non-Proliferation Treaty - NPT) கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே அணு எரிபொருளை (யுரேனியத்தை) செரிவூட்டும் (Enrichment) மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறுசுழற்சி (Reprocessing) செய்யும் தொழில்நுட்பங்களை விற்க வேண்டும் என்று ஜி 8 மாநாட்டில் செய்யப்பட்ட பிரகடனம் இந்தியாவிற்கு சிக்கலை உருவாக்கியுள்ளது.ஏனெனில் இந்தியா அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், ஜி 8 நாடுகளின் இந்தப் பிரகடனம், அணு சக்தி தொழில்நுட்ப வாணிகக் குழுவில் (Nuclear Suppliers Group - NSG) சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு புதிய விதியாகும். என்பிடி உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளுக்கு மட்டுமே அணுத் தொழில்நுட்பத்தை அளிக்கும் இக்குழுவின் உறுப்பு (45) நாடுகள், கடந்த ஆண்டில் இந்தியாவிற்கு அந்த நிபந்தனையில் இருந்து முழு விலக்கை (Clean Waiver) அளித்தன. இதனையடுத்தே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான 123 ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.“சமூக அடிப்படையிலான முழுமையான ஒத்துழைப்பிற்கு” இந்தியா தகுதிபெற்ற நிலையில்தான் நமது நாட்டின் அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெறுவதற்கும், நமது அணு மின் உற்பத்தியை பெருக்கிக்கொள்ள பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து அணு உலைகளை வாங்குவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் துவங்கின. பிரான்ஸின் ஆரிவா நிறுவனத்திடமிருந்து 1600 மெகா வாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை பெற்று அதனை மராட்டியத்தில் நிறுவவும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், ஜி 8 நாடுகளின் இந்த “தடை”ப் பிரகடனம் விடுக்கப்பட்டுள்ளது.


இது நம்மை எந்த வித‌த்திலும் பாதிக்காது என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தான போது (முந்தைய ஆட்சியில்) இவர் அயலுறவு அமைச்சராக இருந்ததால் ஜி 8 பிரகடனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரணாப் முகர்ஜி அளித்த பதில் இதுதான்: “சமூகத் தேவைகளுக்கான அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பானவை பன்னாட்டு அணு சக்தி முகமையும் (International Atomic Energy Agency), அணு சக்தி வாணிகக் குழுவும்தான் (Nuclear Suppliers Group - NSG). இதில் அணு சக்தி வாணிகக் குழுவிடமிருந்து நாம் முழுமையான விலக்கு பெற்றுள்ளோம். எனவே ஜி 8 நாடுகளின் பிரகடனம் குறித்து கவலைப்படத் தேவையில்லை”.ஆனால் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர், “இந்தப் பிரகடனம் கவலைக்கு‌ரியதே” என்று கூறியுள்ளார்.அனில் ககோட்கர் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், மற்ற நாடுகளிடமிருந்து நாம் இறக்குமதி செய்து நமது அணு உலைகளில் பயன்படுத்தும் யுரேனியம் எரிபொருளை, அதன் முதல் பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சி செய்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் புளுடோனியம் என்று அணு எரிபொருளை குறைந்த அளவிலான யுரேனியத்தையும் சேர்த்து நமது ஈனுலைகளில் (Fast Breeder Reactor) பயன்படுத்தலாம். இதன் மூலம் அணு எரிபொருள் முழுமையாக பயன்படுத்தப்படுவது மட்டுமின்றி, அணுக் கழிவினால் (Nuclear Waste) ஏற்படும் ஆபத்தை தவிர்க்கவும் முடியும். இதனையே எரிபொருள் சுழற்சி (Fuel Cycle) என்று அணு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

PAKISTAN MUST HONOUR ITS COMMITMENT TO FIGHT TERROR

Prime Minister Manmohan Singh on Wednesday asserted that India expected Pakistan to sincerely honour its commitment to not to allow its territory to be used for terror against India.
Intervening in the debate on the Indo-Pak Joint Statement in Lok Sabha, the prime minister said, "It is in India's interest that Pakistan has a stable government. However, relations with Pakistan will not improve until Islamabad does not follow its commitment to fight terror in letter and spirit."
We will spare no expense, no effort to defend the nation's sovereignty and integrity, the prime minister said, noting that despite all the friends New Delhi has, the harsh reality of the modern world is that when it comes to matters relating to the country's national security it will have to depend on itself.
Detailing the joint statement, Dr Singh said that he had told his Pakistani counterpart Yusuf Raza Gilani not to make a distinction between terrorist organizations and that mere rhetoric by Islamabad that it was a victim of terrorism itself does not help.
"We are not afraid to discuss issues with them. But they must show the same strong and sustained effort against terrorists. We do not dilute our positions and our resolve to defeat terrorism by talking to our neighbours. Pakistan must defeat terrorism before being consumed by it," Dr Singh said, adding that the impression that talks will continue irrespective of whether it takes action against terror organisations operating against India or not was incorrect.
Pakistan's dossier makes it clear that the Lashkar-e-Tayiba inspired, financed and executed the Mumbai attack. This is the first time Islamabad formally briefed us on a terror attack in India," Dr Singh said.
"Pakistan has said five persons, including Zaki-ur-Rehman Lakvi and Zarar Shah, have been arrested and 13 others declared proclaimed offenders. What we have got from Pakistan is much more than what India had got during NDA regime," the prime minister noted"The people of India expect Pakistan to fulfill the commitment given in the joint statement of Vajpayee-Musharraf that Islamabad will not allow its territory to be used for terror against India. That is a common national consensus in India," he added.
In apparent reference to mention of Baluchistan in the joint statement, Dr Singh said, "We know we are not doing anything wrong and ours is an open book. We have nothing to hide and we are willing to discuss anything."
On End-Use Monitoring agreement with US, the prime minister said there was no provision for unilateral inspection of Indian facilities by the United States. "It will be on a mutually decided basis. There is no provision for on-site inspection or inspection of military areas," he said.
"My understanding is that there is no consensus in the Nuclear Suppliers Group to bar India from accessing enrichment and reprocessing technologies," he said, adding, "It is our expectation that in future, the Nuclear Suppliers' Group will keep the special status of India as a non-signatory to Nuclear Non-Proliferation Treaty when it gave clean exemption last year for civil nuclear cooperation while deciding on giving enrichment and reprocessing technologies."

A breakthrough innovation

A breakthrough innovation in nonwoven toxic chemical decontamination wipe at Texas Tech University recently received a patent from the United States Patent and Trademark Office. The Fibertect wipe was invented by Seshadri Ramkumar, an associate professor of Environmental Toxicology at The Institute of Environmental and Human Health (TIEHH) and is currently under production at Hobbs Bonded Fibers. The process for which the patent has been issued focuses on a multilayered wipe with a unique fabric structure which can wipe liquid and vapor toxins. His research on nonwoven decontamination wipe has resulted in technology transfer and will be commercialized very soon.Dr. Seshadri Ramkumar, who serves as the Co-Chairman of the USA based INDA, Association of the Nonwoven Fabrics Industry’s India committee had been recognized by Lubbock, USA, as one of the Top 20 under 40 Young Professionals in 2007. He has been playing an important role for over the past 5 years for the promotion, growth and international linkages in technical textiles in India. His enthusiasm and tireless efforts were recently recognized at the International Conference on Performance Wear Functional Textiles – “PFT 2008” wherein he was awarded the “Technical Textiles Accomplishment Award” for his nonwovens research and promotion of technical textiles.In an exclusive interview with NonwovenSupplier, Dr. Seshadri Ramkumar revealed the detail on applications of this patented product along with the current research undergoing at Texas Tech University. We congratulate Dr. Ramkumar and wish him success in his endeavor in future.
He speaks....
Can you give us a glimpse on Fibertect™ and its applications?
Fibertect is a dry nonwoven wipe that has a myriad of applications in toxic spill, contaminated environments, military and emergency situations. This wipe is developed using needlepunching nonwoven technology. Nonwoven technology is a burgeoning field globally which has a growth rate of 4-5% per annum. The Fibertect wipe has the capacity to absorb liquid toxic chemicals and hold toxic vapors. This multiple capability is unique to the Fibertect decontamination wipe. Most recently, the United States Patent and Trademark Office granted a patent titled “Process for making chemical protective wipes and such wipes,” US Patent Number 7516525. Fibertect wipe was evaluated by Lawrence Livermore National Laboratory using toxic chemicals. Our invention came out to be the best dry wipe. This result, which received global recognition was published in a prestigious American Chemical Society journal in December 2008. Lawrence Livermore National Laboratory (LLNL) in Livermore, California, USA evaluated my wipe technology and came out with the result that the wipe performed the best as compared to 30 other products with regard to toxic chemical retention. More recently, on March 9, 2009, LLNL recommended my nonwoven wipe technology to be part of a prototype Low Cost Personnel Decontamination System.Depending on the end-use applications, fibers such as cotton and blends can be used to develop the top and bottom absorbent layers. These can be then used to develop the decontamination wipe which has activated carbon to hold toxic vapors. The non-particulate nature of the wipe, i.e., the wipe is devoid of loose particles makes it convenient for cleaning intricate parts of decontaminated objects and human body.

How do you intend to commercialize Fibertect™ wipe?
The wipe technology has been licensed to needlepunching industry, "Hobbs Bonded Fibers" in Waco, Texas, USA. Hobbs Bonded Fibers is currently manufacturing the wipe and is putting together a global marketing team to market Fibertect.

Please give us details on the ongoing research activities at Texas Tech University?
Recently, on April 6, 2009, Texas Tech University unveiled a state-of-the-art "Nonwovens & Advanced Materials Laboratory." The laboratory, which is 4,000 square feet in area has 1.5 meters wide contoured needle zone needlepunching machine and through air thermal bonding machine. We will be soon getting a pilot scale coating machine. The lab has vacuum plasma machine and important fabric mechanical property evaluation instruments such as Instron tensile tester, friction tester, breathability tester, etc.The laboratory's research involves both basic and applied work that will lead to new textile materials which will enhance human health and protect environment. We are also working on projects that develops functional nanofibers and evaluating the toxicity of nano products. We are also exploring novel applications of cotton in industrial textiles such as composites for automobiles, etc.



nonwovensupplier.com

Tuesday, July 28, 2009

மத்திய அமைச்சர் எஸ் ஜெகத்ரட்சகனுக்கு பாராட்டு

மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை துணை அமைச்சராக பதவியேற்றுள்ள ISCUF புரவலர் எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களை ISCUF மாநிலச் செயலாளர்
வி. ராஜ்மோகன் சந்தித்தது பொன்னாடை அணிவித்து ISCUF சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். மாநிலச் செயலாளர் வழக்கறிஞர்
. இளங்கோவன், மாநிலக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் டி.கிரகராஜ், எம்.பி.சங்கர், ராய் டண்டன் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ரதன் சந்திரசேகர், யாழ் வேந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். (27.07.2009)

Monday, July 27, 2009

கல்விக்கூடங்களா? ஏற்றுமதி நிறுவனங்களா?

ப்போது இருக்கிற நான்கு வாரியங்களையும் கலைத்துவிட்டு, ஒரே வாரியம் அமைத்து, ஒரே பாடத் திட்டம் கொண்டுவந்து, ஒரே தேர்வைக் கொண்டுவந்துவிட்டால், அதுதான் சமச்சீர்க் கல்வி என்று பலரும் நினைக்கிறார்கள். படித்த பெருமக்களும் அவ்வாறே நினைக்கின்றனர். அது அல்ல. அடிப்படையான, ஜீவனான ஒன்று என்னவென்றால், பயிற்றுமொழி தாய்மொழி வழியாக இருக்கவேண்டும். ஆங்கில மொழியில் கற்றவர்கள் உயர்ந்தவர்கள், தமிழ் பயின்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற நிலை இருக்கிறது. வேலைவாய்ப்புகள் வரை ஆங்கிலக் கல்வி பயின்றவருக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டுமானால், தமிழ்நாட்டில் தமிழே பயிற்றுமொழியாக்கப்படவேண்டும். இது சமச் சீர்க் கல்வியினுடைய ஆதாரவேர்.

ஆங்கில வழியில் படித்து வந்தவர்கள் உடனடியாக மாற முடியுமா என்று கேள்விகள் எழுகின்றன. ஆரம்பக் கல்வியை தமிழிலே படித்தவர்கள் மேற்படிப்பை ஆங்கிலத்தில் தொடருகிறார்கள். இது முடியுமானால், ஆங்கிலக் கல்வி பயின்றவர்கள் தமிழ் வழிக் கல்விக்கு மாறுவதற்கு எத்தனைக் காலம்வேண்டும்?

ஒரே நாளில் எல்லா வகுப்புகளுக்கும் தமிழைப் பயிற்றுமொழி ஆக்கிவிட முடியும். அதற்குத் தேவை அரசியல் உறுதி. நடுத்தர, படித்த மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது எடுக்கப்படவேண்டிய முடிவு அது.

அடுத்தது அருகமைப் பள்ளி முறை. கோத்தாரி குழு அறிக்கை இதை வலியுறுத்தி இருக்கிறது. இங்கு பொதுப் பள்ளி முறையும், அருகமைப் பள்ளி முறையும் இருந்தன.நாமெல்லாம் வீட்டுக்குப் பக்கத்திலே இருந்த பள்ளியில்தான் படித்தோம். அதுப் பொதுப் பள்ளிதான். எம் எல் மகனும் அங்குதான் படிப்பான். அமைச்சர் பிள்ளையும் அங்குதான் படிக்கும். சாதாரணத் தொழிலாளியின் பிள்ளையும் அங்குதான் படிக்கும். அந்த நிலை ஏன் மாறியது? புதிதாக வந்த ஆங்கில வழி, கட்டண வழிக் கல்விதான் இதற்குக் காரணம்.

இன்று கல்வியின் பலன்கள் மிகச் சிறுபான்மையினரைப் போய் சேருகின்றன. அவர்கள்தான் உயர் கல்வியைப் பயில முடிகிறது. அவர்களுக்கு நாடு முக்கியமல்ல. தமது சுயநலம்தான் பெரிது என்று எண்ணுபவர்கள் அவர்கள்.படித்து முடித்து அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் பறந்து செல்கிறார்கள். நாட்டைத் துறக்கின்றார்கள். மறக்கின்றார்கள்.

ஆனால் சமச்சீர்க் கல்வி முறையில் படிக்கும் மாணவர்கள் நாட்டையும் மக்களையும்பற்றி சிந்திப்பார்கள். நமது நாட்டில் வாழ்வார்கள். நம் நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள். அவர்களுக்காகத்தான் நமது கல்விக்கூடங்கள் இருக்கவேண்டுமேயொழிய, படித்த இளைஞர்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களாக கல்விக்கூடங்கள் மாறிவிடக் கூடாது.

கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன்

ஹுசைன் ஓவியங்களுக்கு இடமில்லை

கஸ்ட் 19 முதல் மூன்று நாள்கள் புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்தியக் கலைகள் மாநாட்டில் சர்வதேசப் புகழ் பெற் இந்திய ஓவியர் எம்.எப்.ஹுசைனின் ஓவியங்கள் இடம் பெறாது. சென்ற ஆண்டும் இவரது ஓவியங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.ஹுசைனின் தலைமைப் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறியுள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றவர்களின் படைப்புகள் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய படைப்புகளை வைக்கவில்லை என்கிறார்கள். முழுமையான பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்தால் ஹுசைனின் ஓவியங்களை கண்காட்சியில் வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கலை மாநாட்டின் இணை இயக்குனர் நேஹா கிர்பால் கூறியுள்ளார்.

இன்னும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடக்கிறதோ?