Wednesday, August 19, 2009

தென் கொரிய அதிபர் கிம் டே ஜங் மரணம்


தென் கொரிய முன்னாள் அதிபர் கிம் டே ஜங்(85) ஆகஸ்ட் 18 அன்று காலமானார்.தென் கொரிய அதிபராக 1997ம் ஆண்டு பதவியேற்றவர் கிம் டே ஜங். கம்யூனிசத்தைப் பின்பற்றும் நாடான வட கொரியாவுடன் அமைதிப் பேச்சு நடத்தி சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக, 2000ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்ட கிம் டே ஜங், சியோல் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நேற்று இவர் மாரடைப்பால் காலமானார்.பல்வேறு அரசியல் எதிர்ப்புகளுக்கிடையே தலைமைப் பதவியைப் பெற்றவர் கிம் டே ஜங். இவருக்கு அடுத்து அதிபர் பதவிக்கு வந்த ரோ மியூ ஹூன், வட கொரியாவுடன் மீண்டும் நட்புக்கரம் நீட்ட விரும்பி செயல்பட்டார்.அதன் அடையாளமாக, வட கொரிய அதிபர் இரண்டாவது கிம் ஜாங் உடன் பேச்சும் நடத்தினார். அதே சமயம், ஊழல் புகாரில் சிக்கிய அதிபர் ரோ மியூ தற்கொலை செய்து கொண்டார்.

தென் கொரியாவில் ஒவ்வொரு வீட்டிலும் மக்களால் போற்றப்படும் கிம் கத்தோலிக்கர்; கொரியா மற்றும் ஆங்கில மொழிகளில் கெட்டிக்காரர். தென் கொரியாவில், "டிஜெ' என்ற இனிஷியலில் தான் அவரை மக்கள் அன்புடன் அழைப்பர்.ஆசியாவின் நான்காவது பிரம்மாண்டமான பொருளாதார நாட்டை சிறந்த முறையில் நடத்தியவர் கிம் டே ஜங் .

No comments:

Post a Comment