
ஸ்புட்னிக் 5 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செயற்கைக்கோள் ஆகும். விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண்வெளிப்பறப்பு இதுவே. 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள் ஏவபட்ட இக் கலம், அடுத்த 8 மாதங்களிலும் குறைந்த காலப் பகுதிக்குள் மனிதனை ஏற்றிய முதல் புவிச் சுற்றுப்பாதைப் பயணத்துக்கு வழி அமைத்தது.
இந்த விண்கலம் பெல்க்கா, ஸ்ட்ரெல்கா என்னும் பெயர் கொண்ட இரண்டு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் ஏற்றிச் சென்றது. விண்கலம் அடுத்த நாளே புவிக்குத் திரும்பியது. எல்லா விலங்குகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இவ் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒளிப்படக்கருவி நாய்களைப் படம் பிடித்தது.
புவியில் இறங்கியதற்குச் சற்றுப் பின்னர் ஸ்ட்ரெல்காவின் குட்டிகளுள் ஒன்று அமெரிக்காவின் அப்போதைய முதல் பெண்ணான ஜாக்குலீன் கென்னடிக்கு சோவியத் நாட்டின் பரிசாக அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment