அண்மையில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்திருந்தார்.இந்த கப்பல் இயங்கப்படும் 85 மெகவாட் அணு உலை, கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தி நிலையத்தில் தான் தயாரிக்கப்பட்டது.தற்போது கல்பாக்கம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் கதிர்வீச்சு அதிகமாக இருப்பதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாக, இந்திய அணு சக்தி கழகம் புதிய நெருக்கடிகளை சந்தித்துள்ளது. எனினும், இந்திய அணு சக்தி கழகத்தலைவர் அனில் ககோட்கர் இத்தகவல்களை மறுத்துள்ளதுடன், இவை பொய்யானவை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் தொடர்ந்து கதிர்வீச்சு அளவை கண்காணித்து வருகிறோம். இதற்கான மண், தாவரங்களில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டே வருகின்றன. கதிர்வீச்சு தன்மை, நிர்ணயித்த அளவை விட மிக மிக குறைவாகத்தான் உள்ளது. மக்களை பாதிக்கும் அளவுக்கு கதிர்வீச்சு இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், அணு சக்தி துறையில் மற்றுமொரு மைல் கல்லாக, உயர்வெப்ப அணு உலைகளை நிறுவம் இந்தியா திட்டமிட்டுள்ளது எனவும், இந்த உயர் வெப்ப அணு உலைகளில் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் பிரித்தெடுக்கப்படும். இந்த ஹைட்ரஜன், பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் இந்திய அணு உலைகளுக்கு தேவையான அணு எரிபொருட்கள் மூலப்பொருட்களை பிறநாடுகள் தாராளமாக வழங்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment