Friday, August 7, 2009

புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஜி-8 நாடுகளின் உடன்பாடு போதாது: ஐ.நா.



புவியைச் சூடாக்கச் செய்யும் வளிமங்களின் வெளியேற்றத்தை அடுத்த 40 ஆண்டுகளில் 80 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜி-8 மாநாட்டில் காணப்பட்டுள்ள உடன்பாடு போதுமானது அல்ல என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

தொழில் புரட்சிக்கு முன்னர் இருந்ததைவிட 2 டிகிரி செல்சியஸ் மாத்திரமே வெப்பத்தை அதிகரிக்க அனுமதிப்பது என்ற இலக்கு வரவேற்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். ஜி-8 நாடுகள் 2020 ஆம் ஆண்டை கால அளவாகக் கொண்ட இடைக்காலத்துக்கான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2050 ஆம் ஆண்டுக்கான இலக்கு மிகவும் காலதாமதமானதென இந்தியா ஏற்கனவே விமர்சித்துள்ளது.

இதனால் டிசம்பரில் கோபன்ஹெகனில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டிலேயே உண்மையான இலக்குகள் நிர்ணயிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment