இந்தியா குறித்து அமெரிக்க தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பு , இந்திய மட்டத்தில் பெரும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாதிகளின் மிரட்டல் இருக்கிறது.ஆகவே இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செல்வது ஆபத்தானது. ஆதலால் அமெரிக்கர்கள் இந்திய நாட்டுக்கு செல்வதை தவிர்க்கவும். அந்த நாட்டில் வசிக்கும் அமெரிக்க மக்களும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் தனது இணைய தளத்தில் அவசர செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வறிவித்தலில் மேலும், அமெரிக்க மக்கள் இந்தியாவிற்குச் செல்கையில், மிகவும் எச்சரிக்கையாக, பாதுகாப்புடன் செல்வது நல்லது. விடுதிகளில் தங்கும்போதும், மதசார்புள்ள இடங்கள், பொழுது போக்கும் இடங்களுக்கு செல்லும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு குறித்து கடும் அதிருப்தி வெளியாகி வருகிறது. இது குறித்து மத்திய உள்துறை இலாகா மந்திரி ப.சிதம்பரம் கருத்துரைக்கையில், சர்வதேச அளவில், இந்தியா ஏனைய நாடுகளைவிட மிகவும் பாதுகாப்பானது. இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவர்கள் பத்திரமாக திரும்பி செல்கிறார்கள். பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் ஒரு சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ஐள்ளன. ஆயினும் அதற்காக , இந்தியா குறித்து இப்படியொரு கருத்தை அமெரிக்க தூதரகம் வெளியிட வேண்டிய அவசியமும், தேவையும், இல்லை. இந்த கருத்தை அமெரிக்கா உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வற்புறுத்துவோம். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதர் முலம், அமெரிக்க அரசுக்கு இது குறித்து விளக்கமாக கடிதம் மூலம் தெரியப்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment