Friday, August 14, 2009

இலங்கை மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா



இலங்கையில் மாத்தறை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் 37 ஆண்டுகளின் பின்னர் ஆகஸ்ட் எட்டாம் தேதி நடைபெற்றது. 1983 இனக்கலவரத்தின் பின்னர் நித்திய, நைமித்திய பூசைகள் எதுவுமின்றி மூடப்பட்டிருந்த இக்கோயில் 1986 ஆம் ஆண்டில் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் பூஜைகளும் நடைபெற்றன. தெற்கில் ஏற்பட்ட சில பதற்ற நிலைமைகள் காரணமாக 2005ஆம் ஆண்டு வரை பூசைகள் நடைபெறாமல் இருந்தது. 2005 ஆம் ஆண்டின் பின்னர் நித்திய பூசைகள் மட்டுமே நடைபெற்றன. 1940களில் கட்டப்பட்ட மேற்படி கோவிலில் இறுதியாக 1972 ஆம் ஆண்டுதான் தேர்த்திருவிழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment