
ஆப்கானிஸ்தான் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசு ஆகும். இந்நாடு எல்லாப்புறமும் நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் நடு கிழக்கு நாடாகவும் தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்பட்டுவதுண்டு. மேற்கே ஈரானை எல்லையாகவும் தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானையும் வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்பனவற்றையும் கிழக்கில் சீனாவையும் எல்லையாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காஷ்மீரூடாக செல்கிறது. ஆப்கானிஸ்தான் இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைத்த பாதைகளை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1747 முதல் 1973 வரை ஆப்கானிஸ்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது ஆயினும் சில இராணுவ அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றி குடியரசாக அறிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். ஆஃப்கான் என்ற சொல்லில் இருந்து தற்கால வழக்கு மருவி வந்துள்ளது. பஸ்டுன்ஸ்கள் இதை இஸ்லாமிய காலத்தில் இருந்து இந்த ஆப்கான் என்ற பதத்தை தமக்குப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு.கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி ஜில்லட் மற்றும் சில துறை சார் அறிஞர்களின் கருத்துப்படி, "ஆப்கான் என்ற சொல் முதன் முதலாக வரலாற்றில் கி.மு 982 ல் அதூத்-அல்-அலாம் என்ற கிபி 10வது நூற்றாண்டு வரலாற்று நூலில் காணப்படுகின்றது. ” இறுதிச் சொல்லான ஸ்தான் (நாடு, நிலம்) என்பது பாரசீக மொழியில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல் 1781 தொடக்கம் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட குவாஜார் அரவம்சத்திற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.
ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ம் நூற்றாண்டில் அஹமத் ஷா அப்டாலி புதிய அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் அப்டுர் ரகுமான் கான் என்பவரால் இது அரச ஏற்புடையப் பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் கொராசன் என்றே அறியப்பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தானின் பெரும் நிலப்பகுதி கொராசனினையே மையமாகக் கொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான பிரதேசமாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானிஸ்தானில் பல நாகரீகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளது. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்பு புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானிஸ்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்.), கிரேக்கர், Mauryans, Kushans, Hepthalites, அரேபியர், மொங்கோலியர், துருக்கி, பிருத்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பல ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசிகப் பேரரசான Achaemenid சாம்ராஜம் எனும் சாம்ராஜம் பலமாக இருந்தது. கிமு 300 ம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 ல் இவரின் மரணத்திற்குப் பின்னர் Seleucids, Bactria, அத்துடன் இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப் பேரரசினால் இப்பிராந்தியத்தினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.
கிபி முதலாம் நூற்றாண்டில Tocharian Kushans போன்றோர் இப்பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை Parthians, Scythians, மற்றும் Huns போன்ற Eurasian tribes உம் Sassanian போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான Hindu Shahis போன்றோர் இப்பிரதேசத்தை ஆட்சி செய்தனர்.
ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள் ஆப்கானிஸ்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கியது. அரபு சாம்ராஜ்ஜியங்கள் தமது அரசை மேற்கு ஆப்கானிஸ்தானுக்கு 652 ல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதிகளையும் 706-709 வரையான காலப்பகுதியில்ஆக்கிரமித்துக் கொண்டது. பின்னர் இப்பகுதியை என அழைத்ததுடன் பெரும்பாலான மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்.
19 ம் நூற்றாண்டுப் பகுதியில் அங்லோ – ஆப்கானிய யுத்ததின் பின்னரும் பராக்சாய் சாம்பிராஜ்யத்தின் வளர்ச்சியின் பின்னரும் ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதி ஐக்கிய இராச்சியத்திடம் போயிருந்தது. 1919 ல் அரசர் அமனுல்லா கான் அரியணை ஏறும் வரை ஐக்கிய இராச்சியம் ஆப்கானிஸ்தானில் பெரும் செல்வாக்குத் செலுத்தியது. இவரின் பின்னர் ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுகந்திரம் பெற்றுக்கொண்டது. இதன் போது பிருத்தானிய இந்தியாவிற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் முறுகலான உறவே நிலவியது.
ஆப்கானிஸ்தானின் நீண்ட உறுதியான காலப்பகுதி என்றால் அது 1933 தொடக்கம் 1973 வரையான அரசர் சாகிர் ஷாவின் ஆட்சிக்காலமாகும். எனினும் 1973 ல் சாகிர் ஷாவின் மைத்துணன் சர்தார் Daoud கான் புரட்சிமூலம் பதவியைக் கைப்பற்றிக்கொள்கின்றான். ஆயினும் Daoud கான்னும் அவரது மொத்த குடும்பமும் 1978 கொலை செய்யப்பட்டர். இக்கொலை இடதுசாரிகளான People's Democratic Party of Afghanistan ஆல் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது இக்குழுவினர் இராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொள்கின்றனர். இது (Great Saur Revolution) மாபெரும் சார் புரட்சி என்று அறியப்படுகின்றது.
இந்த இடது சாரி அரசும் உட்பிரைச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு பிரைச்சனைகளை எதிர்கொண்டது. ரஸ்யா – அமெரிக்காவிற்கிடையிலான பனி யுத்தத்தில் ஆப்கானிஸ்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 ல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski உம் பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முகாஜுதீன்களுக்கு உதவிஅளித்தது. பல்வேறு சர்வதேச அழுத்தங்களினாலும் சுமார் 15,000 துருப்புக்களை முகாஜுதீன்களுடனான யுத்தத்தில் இழந்ததனாலும் சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 ல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களால் பெரிய வெற்றியாகக் கருதப் பட்டது. சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப் பட்டதும் அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதலமான ஆப்கானிஸ்தானை சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும் அதிபர் நஜிபுல்லாவிற்கு தமது ஆதரவை வழங்கியது ஆயினும் 1992 ல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகளின் வாபஸ் இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும் போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.
பல சிறுபாண்மையினரும், புத்திஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டுவெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும் முகாஜுதீன்களின் பல உட்பிரிவுகளிற்கிடையில் யுத்தங்கள் முளலாயின. இதன் உச்சக்கட்டமாக 1994 ல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தலீபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் ஹெல்மான்ட், கந்தகார் பிரதேசத்தைச் சோந்த Pashtuns ஆவார்.
தலீபான் அரசியல் – மதம் சார் சக்தியை உருவாக்கியது. இது 1996 ல் காபூலை கைப்பற்றிக்கொண்டது. 2000 ம் ஆண்டின் முடிவில் தலீபான் நாட்டின் 95% மான நிலப்பரப்பைக் கைப்பற்றிக்கொண்டது. இதேவேளை வடக்கு முண்ணனி எனும் அமைப்பு வடகிழக்கு மாகானமான படக்ஷான்இல் நிலையூன்றி இருந்தது. தலீபான் ஷரியா எனும் முஸ்லிம் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்தியதுடன் பின்னர் பயங்கரவாதிகள் என்று சர்வதேச சமூகத்தால் முத்திரை குத்தப்பட்டனர். தலீபான் அல்-கைடா தீவிரவாதியான ஒசாமா பின் லேடன்னை பாதுகாத்தனர்.
தலீபானின் ஏழு ஆண்டு ஆட்சியில் பெரும்பாலான மக்கள் அவர்களின் சுநத்திரத்தை அனுபவிக்க முடியவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காணப்பட்டன. இதன்போது தலீபான் அதிகளவான மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டது. பெண்கள் வேலைக்குச் செல்வது தடைசெய்யப்பட்டது, பெண்கள் பாடசாலையோ, பல்கலைக்கழகமோ செல்வது தடைசெய்யப்பட்டது போன்றவையைக் குறிப்பிடலாம். இதை எதி்ர்த்தவர்கள் அடிக்கடி கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். களவு எடுததவர்களின் கைகள் வெட்டி அகற்றப் பட்டவை போன்ற கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தலீபான் ஆட்சியின் நல்ல நிகழ்வு எனும் போது 2001 ம் ஆண்டு அளவில் ஆப்கானின் ஓபியம் எனும் போதைப் பொருள் தயாரிப்பு முற்றாக முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது.
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்லிற்குப் பின்னர் அமெரிக்கா ஆப்கானில் உள்ள அல்-கைடா வலையமைப்பைத் தகர்க்க இராணுவ நடவடிக்கையை ஆப்கான் மீது நடத்தியது. தலீபானை தோற்கடிக்க வடக்கு முண்ணியுடன் அமெரிக்கா நட்புறவு பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
2001 டிசம்பர் ல் ஆப்கானின் பெரும்பாலான தலைவர்கள் ஜேர்மனியின் பொன் நகரின் கூடி ஆராய்ந்து ஒரு இடைக்கால அரசை அமைக்க இணங்கினர். இதன் போது கந்தகார் நகரைச் சோந்தவரும், பாஸ்துன் இனத்தவருமான ஹமீட் ஹர்சாய் ஆப்கானிய இடைக்கால அரசின் இக்குனராகத் தெரிவு செய்யப்பட்டார்.
2002 ல் தேசிய ரீதியாக நடைபெற்ற லோய ஜர்கா வின் பின்னர், கர்சாய் ஏனைய பிரதிநிதிகளால் இடைக்கால – அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். 2003 ல் நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டது. 2004 ல் நடைபெற்ற தேசிய ரீதியான தேர்தலின் மூலம் ஹமீட் கர்சாய் புதிய அதிபராகத் தெரிவுசெய்யப்பட்டார். செப்டம்பர் 2005 ல் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றன. 1973ம் ஆண்டுக்குப்பின்னர் சுதந்திரமாகத் தெரிவுசெய்யப்பட்ட சட்டவாக்கசபை இதுவாகும். இதில் பெண்கள் வாக்களித்தமை, பெண்கள் தேர்தலில் போட்டியிட்டமை, தெரிவுசெய்யப்பட்டமை என்பன குறிப்பிடத்தக்க விடங்களாகும்.
நாடு தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகின்ற போதும் கணிசமான பல பிரைச்சனைகளை எதிர்நோக்கியுள்ளது. உதாரணமாக வறுமை, தரம் குறைந்த உட்கட்டுமான வசதிகள், மிதிவெடிகள் அதிக செறிவில் உள்ளமை, பொப்பி, ஓபியம் வியாபாரம் போன்றன. இதைவிட மிஞ்சியிருக்கும் அல்-கைடா உறுப்பினர்கள் மற்றும் தலீபான் போராளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. மேலும் வடக்கில் சில இராணுவத் தலைவர்கள் தொடர்ந்தும் பிரைச்சனை கொடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment