Thursday, August 20, 2009

ஆகஸ்ட் 21 லியோன் டிராட்ஸ்கி படுகொலை



லியோன் டிராட்ஸ்கி (Leon Trotsky ) உக்ரேனில் பிறந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின் (Lev Davidovich Bronstein) . சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். பின்னர் Red Army எனப்படும் சிவப்பு இராணுவத்தின் அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார். 1920களில் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக மெக்சிக்கோவில் சோவியத் உளவாளியான ரமோன் மேர்காடெர் என்பவனால் ஆகஸ்ட் 20 இல் பனிக் கோடரி "ice axe" ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் ஆகஸ்ட் 21 இல் இறந்தார். ட்ராட்ஸ்கியின் கொள்கைகள் ட்ராட்ஸ்கி இசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. ஸ்டாலினிசக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக இது உள்ளது.

No comments:

Post a Comment