மௌனம்
மௌனத்தினூடே
போய் வருகிறேன் என்றாள்
நாங்களும் பிரிந்தோம்
அக்கணமே
ஒருவரையொருவர்
அறிந்து கொள்ளாமலே
(... மலாய் மொழியில் : NOOR S.M)
***********************************
எழுத்தில்லா புத்தகங்களை
வாசித்துக் கொண்டிருப்பது...
பக்கங்களில்லா புத்தகங்களை
புரட்டிக் கொண்டிருப்பது...
ஓவியங்களற்ற புத்தகங்களின்
காட்சிகளில் இலயிப்பது...
எழுத்து வானத்தில்
எழுதப்பட்டதாக
பக்கங்கள்...
மேகங்களுக்கிடையில்
புரண்டுக் கொண்டிருப்பதாக
ஓவியங்கள்...
கனவில் காணக்கிடைத்த
காதலியாக...
ரகசிய புத்தகம்
வாசிக்கப்படுகிறது
(... மலாய் மொழியில் : KEMELA) தமிழில் : பா.அ. சிவம்
No comments:
Post a Comment