Friday, June 12, 2009

மறந்தே போச்சு...

வாழுகின்ற காலத்தை
வையகத்தோர் எவரும்
நிர்ணயித்து வாழ்வென்பது
நிகழ்வில் சாத்தியமில்லை.

வாழும் காலங்களில் நல்
உறவுகளைப் பேணுவதில்லை
உரிமைகளுக்காகக் குரல்
கொடுத்துக் கோருவதில்லை
லட்ச வேட்கையே அன்றி
லட்சிய வேட்கை இல்லை
அற்ப சந்தோஷத்துக்கு
ஆலாய்ப் பறக்கின்றோம்

இயந்திர வாழ்க்கைக்கு
இரையாகிப் போனதால்
மனிதாபிமானம் என்பதே
மறந்துபோனதே மனிதனுக்கு!

மாங்குயில் ஜனா

No comments:

Post a Comment