லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராசின் அதிபர் மானுவேல் ஜெலாயா 28.6.2009 அன்று கைது செய்யப்பட்டது ஆட்சிக் கவிழ்ப்பு சதி என்றும், அதில் அமெரிக்காவுக்கு பங்கு உள்ளது என்றும் வெனிசுலா அதிபர் சாவேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய அரசியல் சட்டம் மீதான ஒரு பொது வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னால் ஜெலாயா கைது செய்யப்பட்டிருப்பது குறித்து ஒபாமா வெளிப்படையாக விளக்கவேண்டும் என்று சாவேஸ் கூறியுள்ளார்.
இது ஹோண்டுராசுக்கு மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்காவின் அனைத்து மக்களுக்கும் எதிரானது . எனவே இந்த அவமதிப்புக்கு எதிராக ஒபாமா அறிக்கை வெளியிடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஹோண்டுராசின் மேல்தட்டு வர்க்கம் உடந்தை என்று குற்றம் சாட்டிய சாவேஸ், அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் குடியரசாக ஹோண்டுராசை மாற்ற நினைக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அரசியல், ராணுவ, பயங்கரவாதத் தளமாக ஹோண்டுராசை மாற்றும் முயற்சி என்றும் குறைகூறியுள்ளார்.

No comments:
Post a Comment