
நாட்டுக்கு நாடு போடும்
குண்டு
உனக்கு மகுடமல்ல
மரணம்.
உடம்புகளைத் துளைக்கும் குண்டுகள்
வெற்றிகள் அல்ல
தோல்விகள்!
யுத்தத்தினால் ...
ஊனமுற்ற பிறப்புகளையும் பசுமையற்ற பரப்பையும்
இன்றுவரை
வரலாற்றுச் சுவடுகள்
கண்ணீர்விட்டுச் சொல்லும்...
மனிதம் மறக்கப்பட்டதனால்
உலக அமைதி இல்லை
இனி
மானுடத்தின் மகத்துவத்தை பரப்பி
நீ என்பதை மறந்து
நான் என்பதைத் துறந்து
நாம் என்பதை உணர்ந்தால்
போரில்லா உலகிற்கு
பயணப்படுவோம்!
எதிர் இரு அணிகள் பகைத்தால்
யுத்தம் உருவாகும்!
நாம் சேர்ந்தால்
புது சித்தம் உருவாகும்!
புரிந்து கொள்!
போரில்லா உலகு ...
பிரிவில்லா உறவு ...
நட்போடு கை கோர்த்து
வாழப் பழகு!
இன்று தேவை அகிம்சாவாதியின்
க்ளோனிங் பதிப்புகள்!
நாளை தெரியும்
அமைதியின் பிரதிபலிப்புகள்!
இனி
பயங்கரவாதி மதவாதிஎல்லாம்
மிதவாதியாகட்டும்!
இனி
கம்பெடுத்தவன்
தண்டல்காரன் இல்லை
கை கொடுத்தவன்
தலைவன் ஆவான்...
இனி வெள்ளைக்கொடி பறக்கட்டும்!
சமுதாயப்புறாக்கள்
சிறகடித்துப் பறக்கட்டும்!!
தையிபா பானு,
இஸ்கப் நிர்வாகக் குழு உறுப்பினர்
ராஜபாளையம்
குண்டு
உனக்கு மகுடமல்ல
மரணம்.
உடம்புகளைத் துளைக்கும் குண்டுகள்
வெற்றிகள் அல்ல
தோல்விகள்!
யுத்தத்தினால் ...
ஊனமுற்ற பிறப்புகளையும் பசுமையற்ற பரப்பையும்
இன்றுவரை
வரலாற்றுச் சுவடுகள்
கண்ணீர்விட்டுச் சொல்லும்...
மனிதம் மறக்கப்பட்டதனால்
உலக அமைதி இல்லை
இனி
மானுடத்தின் மகத்துவத்தை பரப்பி
நீ என்பதை மறந்து
நான் என்பதைத் துறந்து
நாம் என்பதை உணர்ந்தால்
போரில்லா உலகிற்கு
பயணப்படுவோம்!
எதிர் இரு அணிகள் பகைத்தால்
யுத்தம் உருவாகும்!
நாம் சேர்ந்தால்
புது சித்தம் உருவாகும்!
புரிந்து கொள்!
போரில்லா உலகு ...
பிரிவில்லா உறவு ...
நட்போடு கை கோர்த்து
வாழப் பழகு!
இன்று தேவை அகிம்சாவாதியின்
க்ளோனிங் பதிப்புகள்!
நாளை தெரியும்
அமைதியின் பிரதிபலிப்புகள்!
இனி
பயங்கரவாதி மதவாதிஎல்லாம்
மிதவாதியாகட்டும்!
இனி
கம்பெடுத்தவன்
தண்டல்காரன் இல்லை
கை கொடுத்தவன்
தலைவன் ஆவான்...
இனி வெள்ளைக்கொடி பறக்கட்டும்!
சமுதாயப்புறாக்கள்
சிறகடித்துப் பறக்கட்டும்!!
தையிபா பானு,
இஸ்கப் நிர்வாகக் குழு உறுப்பினர்
ராஜபாளையம்
No comments:
Post a Comment