இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு, தப்பியோடிய தாவூத் இப்ராகிம் உட்பட 42 குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.தப்பியோடிய குற்றவாளிகள் குறித்த விஷயத்தில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு தர மறுப்பதாக மாநிலங்களவையில் பேசுகையில் கிருஷ்ணா கூறினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 42 குற்றவாளிகள் பட்டியலை இந்தியா, பாகிஸ்தானிடம் அளித்துள்ளதாகவும், இவர்களில் கடந்த 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் மற்றும் கடந்த நவம்பரில் நடைபெற்ற மும்பை தாக்குதல் குற்றவாளிகளும் அடங்குவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கான ஆதாரங்களும், ஆவணங்களும் அளிக்கப்பட்டு விட்ட நிலையில், பாகிஸ்தான் அவை போதுமானதாக இல்லை என்றும், அவர்களுக்கு எதிரான குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி வருவதாகவும் எஸ்.எம். கிருஷ்ணா கூறினார்.
தாவூத் இப்ராகிம், டைகர் மேமன், சோட்டா ஷகில், லக்பீர் சிங் போன்ற முக்கியக் குற்றவாளிகள் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் மறுத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த குற்றவாளிகளைப் பொருத்தவரை, போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், குற்றவாளிகளை ஒப்படைக்க வகை செய்யும் ஒப்பந்தத்தை காரணம் காட்டியும் அவர்களை ஒப்படைக்க மறுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment