Wednesday, July 8, 2009

காந்தி, மண்டேலா, லிங்கன் : ஒபாமாவின் ஹீரோக்கள்



தவி ஏற்றபின் முதல் முறையாக ரஷ்யத் தொலைகாட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சர்வதேச அளவில் மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா ஆகியோரே தன்னைக் கவர்ந்த முன்மாதிரிகள் என்று குறிப்பிட்டுள்ளார். வன்முறையைக் கையாளாமல் மக்களின் மனங்களை மாற்றிய இந்தத் தலைவர்களை தாம் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க அளவில் ஆப்ரகாம் லிங்கனை தாம் நேசிப்பதாகச் சொன்ன ஒபாமா, அமெரிக்க வரலாற்றின் கடும் நெருக்கடியான காலகட்டத்தை திறமையாக எதிர்கொண்டவர் என்று அவரைப் புகழ்ந்தார். அடிமைகள் முதல் அடிமைப்படுத்தியவர்கள் வரை, அனைவரது மனங்களையும் புரிந்துகொண்ட, எல்லா மக்களையும் இணைக்க பெருமுயற்சி மேற்கொண்ட தனித்துவம் கொண்ட தலைவர் அவர் என்றும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment