1952ஆம் ஆண்டு இந்திய சோவியத் கலாச்சாரக் கழகம் என்ற பெயருடன் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், சோவியத் நாட்டுடனான உறவை வளர்ப்பதிலும், பேணிக்காப்பதிலும் தொடர்ந்து தனது பங்களிப்பைச செலுத்தி வந்தது. சோவியத் தேசத்தின் சிதைவுக்குப் பிறகு, "இந்தியக் கலாச்சார நட்புறவுக்கழகம்" (ISCUF) என்ற பெயர் மாற்றத்துடன் விரிந்த உலகளாவிய பார்வையுடன், அனைத்து நாடுகளுடனான நல்லுறவுக்குப் பாலமிடும் அமைப்பாக இந்திய தேசம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. உலகப்புகழ்பெற்ற நீதியரசர் V.R. கிருஷ்ணய்யர் இதன் தலைவராக இருந்து வழிநடத்தி வருகிறார்.
1 comment:
அருமை!! ம்..
Post a Comment