Monday, July 27, 2009

ஹுசைன் ஓவியங்களுக்கு இடமில்லை

கஸ்ட் 19 முதல் மூன்று நாள்கள் புதுடில்லியில் நடைபெறவுள்ள இந்தியக் கலைகள் மாநாட்டில் சர்வதேசப் புகழ் பெற் இந்திய ஓவியர் எம்.எப்.ஹுசைனின் ஓவியங்கள் இடம் பெறாது. சென்ற ஆண்டும் இவரது ஓவியங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.ஹுசைனின் தலைமைப் பாத்திரத்தை குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறியுள்ள நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மற்றவர்களின் படைப்புகள் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவருடைய படைப்புகளை வைக்கவில்லை என்கிறார்கள். முழுமையான பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்தால் ஹுசைனின் ஓவியங்களை கண்காட்சியில் வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கலை மாநாட்டின் இணை இயக்குனர் நேஹா கிர்பால் கூறியுள்ளார்.

இன்னும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடக்கிறதோ?

1 comment:

Anonymous said...

"இன்னும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடக்கிறதோ?"
அதற்காக ஹிந்து கடவுளை அவமதிக்கும் படங்களை வைக்கலாமா?

Post a Comment