திருவள்ளூர் மாவட்ட இஸ்கஃப் சார்பில் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தமிழக அரசு பரிசு பெற்ற ஷங்கர நாராயணனுக்கு பாராட்டும், நீண்ட காலத்திற்கு பின்னர் நட்புறவோடு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ரஷ்யா சென்றதற்கு வாழ்த்து தெரிவித்தும், மதுரையில் நடைப்பெறவுள்ள இஸ்கஃப் மாநாட்டுக்கும் வாழ்த்து தெரிவித்தும். மாநில மாநாட்டை ஒட்டி பிரதிநிதிகளை தேர்வு செய்ததற்கான நிர்வாகிகள் கூட்டமும் நடந்தது.
ஆவடி கனரக வாகன தொழிலகத்தின் தொழிலாளர் சங்கமான 'லோக் நாயக் ஜெயப்பிரசாத் நாராயண்' அரங்கில் நடைபெற்ற கூட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் தோழர் மதிவாணன் தலைமையேற்று நடத்தினார். மாவட்டச் செயலாளர் தோழர் க.குணசேகரன் இஸ்கஃப் அமைப்பின் நோக்கம், அதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அரசு அலுவலரும் மாவட்ட இஸ்கஃப் உறுப்பினருமான தோழர் அஸ்வத்தாமா உரையாற்றிய பின்னர் சமீபத்தில் கனடா, நியூயார்க் நகரங்களுக்கு பயணம் செய்து வந்துள்ள எழுத்தாளர். எஸ்.ஷங்கர நாராயணன் நட்புறவு, அடித்தட்டு மக்கள் பால் நிலவும் புறக்கணிப்பு முதலிய உள்ளார்ந்த விவரங்களை தான்கண்ட நாடுகளில் நிலவும் போக்கை தோழர்கள் நடுவே பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தில் தோழர்கள் கே.சிவசங்கரன், புஷ்பராஜ், நா.தேனப்பன், விக்னேஷ் ராவ், பா.சேகர், கே.மந்திரமூர்த்தி, கே.ஞானசேகரன், கே.கற்பகதாஸ் மற்றும் கே.விஜயசீலன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் தோழர் சிட்டிபாபு நன்றி கூற திருவள்ளூர் மாவட்ட இஸ்கஃப் கூட்டம் இனிதே நிறைவானது.

- புதிய உறுப்பினர்களை சேர்ப்பது
- மாநாட்டிற்கு பிரதிநிதிகளை தேர்வு செய்வது
- மாதம் தோறும் சிறப்பு கூட்டம், கருத்தரங்கு நடத்துவது தொடர்பாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
கூட்டத்தின் இறுதியில் தோழர் சிட்டிபாபு நன்றி கூற திருவள்ளூர் மாவட்ட இஸ்கஃப் கூட்டம் இனிதே நிறைவானது.
No comments:
Post a Comment