தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி, இலங்கை அரசிடம் இந்தியா கண்டிப்புடன் வற்புறுத்தி உள்ளது. பாராளுமன்றத்தில், பிரதமர் மன்மோகன்சிங் இந்த தகவலை வெளியிட்டார்.
எகிப்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற அணி சேரா நாடுகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றார்.
இந்த மாநாட்டு நிகழ்ச்சியின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து, நேற்று டெல்லி மேல்-சபை கூட்டத்தில் பங்கேற்ற மன்மோகன்சிங்கிடம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் டி.ராஜா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பிரதமர் மன்மோகன்சிங், இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளின் குறைகளை போக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் கண்டிப்புடன் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இந்தியா-இலங்கை இடையேயான நல்லுறவு, இலங்கை தமிழர் பிரச்சினையை இலங்கை அணுகுவதை பொறுத்துதான் அமையும் என்றும் அவர் தெரிவித்தார். மன்மோகன்சிங் மேலும் கூறியதாவது:-
"இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம், அங்குள்ள தமிழர்களின் நிலை பற்றிதான் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். இலங்கை தமிழர்களின் நலனில் இந்தியாவுக்கு உள்ள நியாயமான கவலை குறித்து அவரிடம் எடுத்துக்கூறினேன். இந்த பிரச்சினையில்தான் இந்தியா-இலங்கையின் நல்லுறவு அடங்கி உள்ளது என்றும் குறிப்பிட்டேன்.
இலங்கையில் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து 33 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள நிவாரணமும் மறுவாழ்வும் அளிப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும்படி ராஜபக்சேயிடம் வற்புறுத்தினேன்.
இலங்கையில், கவுரவத்துடன் கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்கு தமிழர்களின் சட்டபூர்வ விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கான சூழ்நிலையை ராஜபக்சே அரசு உருவாக்கித் தரவேண்டும். அதற்காக, இந்தியா-இலங்கை இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி அதிகார பகிர்வு வழங்க வேண்டும் என்றும் வற்புறுத்தினேன்''.
இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

No comments:
Post a Comment