Thursday, July 23, 2009

அமெரிக்கா... இது நியாயமா?

கொஞ்ச நாளாக அமெரிக்காவைப்பற்றி நல்ல சேதிகளாக வந்துகொண்டிருந்தன. இஸ்கப் குரலிலும்தான். புண்ணியம் கட்டிக் கொண்டவர் ஒபாமா. இப்போது ஒரு திருஷ்டிப் பரிகார சேதி.

இரான் நாட்டில் ராணுவதளம் அமைக்க மாட்டோம் என்று ஈஜிப்ட்டில் ஒபாமா பேசி கொஞ்ச நாள்தான் ஆகிறது. இப்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜோ பிடன், இஸ்ரேல் நாடு இரான் அணு நிலையங்களின்மீது தாக்குதல் தொடுத்தால் நாங்கள் கண்டுகொள்ளமாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்.

இரான் யுரேனிய செறிவூட்டலை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஒபாமாவின் நிர்வாகம் இப்போதுதான் அறிவித்திருந்தது. தனக்கு சமமாக இரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தனக்கு இழுக்கு எனக் கருதிய இஸ்ரேல் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவை வைத்துக் கொண்டு இரானை நெருக்கடிக்குத் தள்ளி வந்தது. இப்போது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று அமெரிக்கா எச்சரித்திருப்பது சர்வ தேச அரங்கில் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

இவிங்க திருந்தவே மாட்டாங்களோ?

No comments:

Post a Comment