Thursday, July 23, 2009

ஹோண்டுராஸ் : உலகத்தின் கண்டனப் பார்வை

மக்களுடன் மனுவல் செலாயா

தென் அமெரிக்க நாடான ஹோண்டுராசில் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. ஹோண்டுராசின் அதிபரான மனுவல் செலாயா நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார். பதவியேற்றிருக்கும் ராணுவத் தளபதி ரோபெர்டோ மிச்செல்டி அமெரிக்காவின் பின்னணியுடன்தான் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கக்கூடும் என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் குற்றம் சாட்டி இருந்ததை இஸ்கப் குரலில் படித்த ஞாபகம். இப்போது ஆட்சிக் கவிழ்ப்பு தவறு என்று அமெரிக்காவும் அறிக்கை வெளியிட்டிருப்பது ஆச்சர்யமான விஷயம்.

அண்மையில் நாடு திரும்ப எத்தனித்த செலாயாவின் விமானத்தை தரையிறங்கவிடாமல் ஹோண்டுராஸ் நிர்வாகம் திருப்பி அனுப்பியபிறகு, ஹோண்டுராசின் மக்களும் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான நாடுகளின் கண்டனத்தை ஹோண்டுராசின் ராணுவ ஆட்சி சந்தித்து வருகிறது. எனவே, அது தணிந்து செல்லவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. சில சமரசத் திட்டங்களுடன் மீண்டும் செலாயாவை அதிகாரத்தில் அமரவைக்கவும் அது தயாராக இருப்பதாக சேதிகள் வருகின்றன. தென் அமெரிக்க பிராந்தியத்தில் அமெரிக்காவின் பலம் குறைந்து வருவதையும், சாவேஸ் போன்ற இடதுசாரிகளுக்கு மதிப்பு அதிகரித்து வருவதையும் அமெரிக்க அரசியல் கணிப்பாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment