
பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு இந்திய ராணுவத்தின் சிறப்பு லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையில் ராணுவத்தை கவுரவப்படுத்தும் விதமாக மோகன்லால் கீர்த்தி சக்ரா என்ற படத்தில் ராணுவ அதிகாரி வேடம் ஏற்று சிறப்புற நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் மலையாளத்தில் தயாரிக்கப்பட்டு இந்தி உள்பட இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது. தமிழில் 'அரண்' என்ற தலைப்பில் இப்ப
டம் வெளியானதுஇதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மேஜர் ரவியின் இயக்கத்தில் குருஷேத்ரா என்ற திரைப்படத்திலும் மோகன்லால் ராணுவ அதிகாரியாக திறம்பட நடித்து ஒரு உண்மையான ராணுவ அதிகாரியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார். இப்படத்தில் நடிப்பதற்காக மோகன்லால் கார்கில் உள்பட ராணுவத் தளங்களில் பல மாதங்கள் தங்கியிருந்து சிறப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டார். இந்தத் திரைப்படமும் இந்திய ராணுவத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் அமைந்திருந்தது.
இதற்காக நடிகர் மோகன்லாலை சிறப்பிக்கும்விதமாக இந்திய ராணுவம் அவரை கவுரவிக்க முடிவு செய்தது. அதற்காக சிறப்பு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. டெல்லியிலுள்ள ராணுவத் தலைமையகத்தில் தலைமை ராணுவத் தளபதி தீபக் கபூர் இந்த கவுரவத்தை அவருக்கு வழங்கினார். விழாவில் இந்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பங்கேற்றார்.
No comments:
Post a Comment