பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
புரவலர் - இஸ்கப்
என்ன வாழ்க்கை இது? தினம் தினம் ஒரே மாதிரி செய்ததையே செய்துகொண்டு, ஏதாவது மாற்றம் இருக்கிறதா...இன்றைக்குப் புதிதாக எதையோ செய்யப் போகிறோம் என்றில்லாமல் நேற்று செய்ததையே இன்றும் செய்துகொண்டு நாளையும் செய்யப் போகிறோம்...வாழ்க்கையே இயந்திரம் மாதிரி மாறிப் போச்சு...ஒரே சலிப்பவும் வெறுப்பாவும் இருக்கு சார்...
இதிலிருந்து நம்மால் விடுபட முடியாவிட்டாலும், இதிலும் ஓர் உளவியல் உண்மை இருப்பதாக நான் உணர்கிறேன்.
மனிதனின் மனம் மாற்றத்தை விரும்புகிறது. பழகிப் போன ஒன்றிலேயே மனிதன் செக்கு மாட்டைப் போல சுற்றி வர விரும்பவில்லை. வரையறுத்துக் கொண்டு ஒரு எல்லைக்குட்பட்டு ஒரே வட்டத்தைச் சுற்றிவரும் மனோபாவம் அலுத்துப்போய், மாற்றங்களைத் தேடி மனம் அலைகிறது...ஒரே மாதிரியான வாழ்க்கையின் வேகம் பழகிப் பொய், இன்னும் சற்று வேகமாய் இயங்கும் ஒரு வாழ்க்கைக்கு மனம் நாட்டம் கொள்கிறது.
முதலாளி என்கிற பழைய பாட்டைப் பாடுகிற பழைய பஞ்சாங்கமாக இல்லாமல், இன்றைய நவீன மயமாக்கலுக்கு அவர் தன்னை நிச்சயம் உட்படுத்திக் கொள்ளவேண்டும். தன்னுடைய இயந்திர வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் அவரது நிறுவனத்தில் அல்லது தொழிற்கூடத்தில் நவீன இயந்திரங்களை நிச்சயம் மாற்றி அமைத்தல்வேண்டும்.
நவீனமயமாக்கல் என்னும் கோட்பாட்டுக்குள் வராமல் பழைய பாணியில் இயங்கிக் கொண்டிருந்ததால், அவர் தன வாடிக்கையாளர்களை நிச்சயம் இழக்கக் கூடும். அத்துடன், பிற முதலாளிகளுடன் போட்டி போட முடியாத சூழ்நிலையில் தோற்றுப் போவார் என்று சொல்வதைவிட, அவர் பந்தயத்திலே இல்லாத ஒரு அவலம் ஏற்பட்டுவிடும்.
இது முதலாளிக்கும், அவரது தொழில் கூடத்துக்கும் மட்டுமே சொல்லப்படும் கருத்து அல்ல. பழையன கழிதலும், புதியன புகுதலும் எல்லாத் துறைகளுக்கும் எல்லாக் காலங்களிலும் பொருந்தக் கூடிய கோட்பாடுதான்.
'மாற்றம்' ஒன்றைத் தவிர்த்து மற்ற எல்லாமே மாறக் கூடியவையே. மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். நிச்சயம் ஏற்றத்தைக் கண்டு மகிழ்வீர்கள்.

No comments:
Post a Comment