Monday, July 20, 2009

பிரேசிலைக் கலக்கும் டிவி தொடர்

நம்ம ஊரில்தான் டிவி சீரியல் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். பிரேசில் நாட்டில் ஒரு டிவி தொடர் அந்நாட்டு மக்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. அதில் என்ன வியப்பு என்கிறீர்களா? அது ஒரு இந்திய சீரியல்.

KAAMINO DAAM INTHIYA என்ற அந்த சீரியலின் கதை இந்தியாவில் நடக்கிறது. ராஜஸ்தானில் ஒரு ஏழை ஜாதிப் பெண்ணைக் காதலிக்கும் பணக்கார வாலிபனின் கதைதான் இந்தத் தொடர். முழுக்க முழுக்க இந்தியாவில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைக் காட்சித் தொடரில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் பிரேசில் கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் சில முக்கிய வசனங்கள், குறிப்பாக பன்ச் டயலாக்குகள் இந்தி மொழியில் பேசப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த வசனங்கள் பிரேசில்வாசிகளிடையே படு பிரபலம்.

No comments:

Post a Comment