Friday, July 10, 2009

நன்கொடையில் உலக சாதனை படைத்த இஸ்கப் புரவலர் பாலம் அய்யா

ன்பு பாலம் அமைப்பின் நிறுவனரும் , இஸ்கப் அமைப்பின் புரவலருமான 'பாலம் அய்யா' என்று அன்போடு அழைக்கப்படும் கலியாணசுந்தரம் அவர்கள் நன்கொடை வழங்குவதில் உலக சாதனை படைத்துள்ளதால் இஸ்கப் அமைப்பு பெருமிதம் கொள்கிறது.

அரசு ஊழியரான பாலம் அய்யாவுக்கு 1990ஆம் ஆண்டு நான்காவது ஊதியக்குழு நிலுவைத் தொகை ஒரு லட்சத்து பதினோராயிரம் ரூபாய் வந்தபோது, அத்தொகையை ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார். இது இந்தியாவின் மா ஊதிய வர்க்கத்திலிருந்து பெறப்பட்ட பெரும் நன்கொடையாக பதிவு செய்யப்பட்டது.

1996 இல் அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயை தான் கல்வி பயின்ற அணித்து நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

1998 இல் ஓய்வு பெற்றபோது கிடைத்த பத்து லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

2009 இல் ஐந்தாவது ஊதியக் குழு நிலுவைத் தொகை பத்து லட்சம் ரூபாயை தனது எழுபதாவது பிறந்த நாளில் மக்கள் நலத் திட்டங்களுக்காக அளித்தார்.

தற்போது ஆறாவது ஊதியக் குழு தொகை ஐந்து லட்சம் ரூபாயை ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்காக வழங்குவதாக பாலம் அய்யா அறிவித்துள்ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஊதிய நன்கொடைகள் தவிர, தன் பங்குக்கு வந்த பூர்விக சொத்து ஐம்பது லட்சத்தையும், அமெரிக்க விருதாக கிடைத்த முப்பது கோடி ரூபாயையும் அவர் ஏற்கனவே நன்கொடையாக அளித்தவர்தான்.
ன்பு பாலம் அமைப்பின் நிறுவனரும் , இஸ்கப் அமைப்பின் புரவலருமான 'பாலம் அய்யா' என்று அன்போடு அழைக்கப்படும் கலியாணசுந்தரம் அவர்கள் நன்கொடை வழங்குவதில் உலக சாதனை படைத்துள்ளதால் இஸ்கப் அமைப்பு பெருமிதம் கொள்கிறது.

அரசு ஊழியரான பாலம் அய்யாவுக்கு 1990ஆம் ஆண்டு நான்காவது ஊதியக்குழு நிலுவைத் தொகை ஒரு லட்சத்து பதினோராயிரம் ரூபாய் வந்தபோது, அத்தொகையை ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார். இது இந்தியாவின் மாத ஊதிய வர்க்கத்திலிருந்து பெறப்பட்ட பெரும் நன்கொடையாக பதிவு செய்யப்பட்டது.

1996 இல் அகவிலைப்படி நிலுவைத் தொகை ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாயை தான் கல்வி பயின்ற அணித்து நிறுவனங்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

1998 இல் ஓய்வு பெற்றபோது கிடைத்த பத்து லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தார்.

2009 இல் ஐந்தாவது ஊதியக் குழு நிலுவைத் தொகை பத்து லட்சம் ரூபாயை தனது எழுபதாவது பிறந்த நாளில் மக்கள் நலத் திட்டங்களுக்காக அளித்தார்.

தற்போது ஆறாவது ஊதியக் குழு தொகை ஐந்து லட்சம் ரூபாயை ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்காக வழங்குவதாக பாலம் அய்யா அறிவித்துள்ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஊதிய நன்கொடைகள் தவிர, தன் பங்குக்கு வந்த பூர்விக சொத்து ஐம்பது லட்சத்தையும், அமெரிக்க விருதாக கிடைத்த முப்பது கோடி ரூபாயையும் அவர் ஏற்கனவே நன்கொடையாக அளித்தவர்தான்.

No comments:

Post a Comment